தானம் அறக்கட்டளை சார்பில் தட்டான்குளம் கண்மாய் சீரமைப்பு பணி

மதுரை தானம் அறக்கட்டளை மற்றும் கிராம மக்கள் ஒருங்கிணைந்து தட்டான்குளம் கண்மாயை ஞாயிற்றுக்கிழமை சீரமைத்தனர்.

மதுரை தானம் அறக்கட்டளை மற்றும் கிராம மக்கள் ஒருங்கிணைந்து தட்டான்குளம் கண்மாயை ஞாயிற்றுக்கிழமை சீரமைத்தனர்.
மதுரை தானம் அறக்கட்டளையின் துணை அமைப்பான நகர்ப்புற நீர்வள மையம் மற்றும் எச்.சி.எல். பவுண்டேசன் ஆகியவற்றின் சார்பில் ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கம் ஊராட்சிக்குள்பட்ட "தட்டான்குளம்' கண்மாயை அப்பகுதி மக்களுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து தட்டான்குளம் கண்மாயின் உள்ளே வீசப்பட்ட குப்பை, மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை கிராமச் சிறுவர்கள் அகற்றினர். மேலும் தட்டான்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள்  கண்மாயில் அடர்ந்திருந்த கருவேல மரங்களையும்,  களைச்செடிகளையும்  வெட்டி  அகற்றினர். காலையில் தொடங்கிய கண்மாய் சுத்தப்படுத்தும் பணி மாலை வரை நீடித்தது. இப்பணியின்போது 10 சாக்குமூட்டைகளில் பிளாஸ்டிக் கழிவுகளையும்,  65 கிலோ உடைந்த மது பாட்டில்களையும் சேகரித்து அகற்றினர். மேலும் கண்மாயில் 60 மீட்டர்  நீளத்திற்கு அடர்ந்து வளர்ந்திருந்த கருவேல மரங்களும் வெட்டப்பட்டன. கண்மாய் சுத்தப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக,  கண்மாய் பாதுகாப்பில் உள்ளூர் மக்கள் அமைப்புகளின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
அப்போது, தட்டான்குளத்தில்  உள்ள செயல்படாத 2 கிணறுகளை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். 
இதைத் தொடர்ந்து கிராமத்தில் பெய்யும் மழைப்பொழிவை அளவிட இரண்டு குறைந்த கட்டண "மழைமானி'கள் தானம் அறக்கட்டளை நிறுவனத்தின் சார்பில் நிறுவப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com