நிகழ்காலத்தை எண்ணி பயணித்தால் ஆனந்தமே: சுகி சிவம்

கடந்த காலத்தை நினைப்பதையும், வருங்காலத்தை கணக்கிடுவதையும் தவிர்த்துவிட்டு நிகழ்காலத்தை

கடந்த காலத்தை நினைப்பதையும், வருங்காலத்தை கணக்கிடுவதையும் தவிர்த்துவிட்டு நிகழ்காலத்தை கருத்தில் கொண்டு பயணித்தால் ஆனந்தமாய் வாழலாம் என சொற்பொழிவாளர் சுகி சிவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
செளராஷ்டிரா தொழில் வர்த்தக சபையின் "சிட்கான்' தொழில் வர்த்தக மாநாடு, கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்று வந்தது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி காலை 6 மணிக்கு நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் விசாகன் மாரத்தான் போட்டியை தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து  ராஜா முத்தையா மன்றத்தில் பெண்கள் பங்கேற்றப் பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் "ஆனந்தமாய்  வாழ்வோம்' என்ற தலைப்பில் நடைபெற்ற சொற்பொழி நிகழ்ச்சியில் பங்கேற்று சொற்பொழிவாளர் சுகி.சிவம் பேசியதாவது:  சமுதாயத்தில் அனைத்து விதமான பிரச்னைகளையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கிறவர்களை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது. கேளராவில் நடிகை ஒருவர் தனது சொகுசு கார் செல்ல சாலை வசதி இல்லை.
சாலை வசதி செய்து தரும்படி முதல்வரிடம் மனு அளித்தார். அச்சமயம் கேரளாவில் புயல் தாக்கியது. 
சாலை வசதி கேட்ட அந்த நடிகை சிறிய படகில் அமர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. வாழ்வில் எந்த சூழலில் என்ன வேண்டுமானாலும் நேரிடலாம். இருப்பதை வைத்துக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறவர்கள் தான் வாழ்வில் ஜெயிக்க முடியும்.
வாழ்வில் நமது சுகம் மற்றும் துக்கங்களுக்கு பிறர் இயந்திரமாக இருக்கக் கூடாது. நமது சுகம் மற்றும் துக்கங்களுக்கு நாம் மட்டுமே இயந்திரமாக இருக்க வேண்டும். மனிதன் வாழ்வில் சொத்துக்கள் சம்பாதிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறான்.
 ஆனால் அதில் மகிழ்ச்சி கிடையாது. சொத்துக்களை அனுபவிப்பதில் தான் மகிழ்ச்சியடைய முடியும். கடந்த காலத்தை நினைப்பதும், வருங்காலத்தை கணக்கிடுவதும் வாழ்வில் மகிழ்ச்சி அளிக்காது. நிகழ்காலத்தை கருத்தில் கொண்டு பயணித்தால் ஆனந்தமாய் வாழலாம் என்றார்.
பின்னர் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. செளராஷ்டிரா தொழில் வர்த்தக சபை தலைவர் எம்.கே.கலாதர் பாபு, பொதுச் செயலர் டி.ஆர்.மோகன்ராம், கண்காட்சித் தலைவர் குமரன் பி.ஜகுவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com