மதுரையில் குழந்தைகள் உரிமைத் திருவிழா

மதுரையில் சக்தி விடியல் தொண்டு நிறுவனத்தின் சார்பில், குழந்தைகள் உரிமைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

மதுரையில் சக்தி விடியல் தொண்டு நிறுவனத்தின் சார்பில், குழந்தைகள் உரிமைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
மதுரை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், விடியல் குழந்தை உரிமைகள் இயக்கத்தைச் சேர்ந்த 250 குழந்தைகள் பங்கேற்றனர். இதில் மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ், தமிழக நதிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் சி.அண்ணாதுரை ஆகியோர் சமூக மேம்பாட்டிற்காக தாங்களே முன்னேடுத்து வரும் குழந்தைகள் இயக்கத்தை வாழ்த்திப் பேசினர். 
மேலும் இவ்விழா குறித்து விடியல் தொண்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் ச.ஜிம் ஜேசுதாஸ் கூறியது: ஐ.நா. சபை 4 வகையான குழந்தைகள் உரிமைகள் குறித்து கூறுகிறது. அதில் உயிர் வாழ்தல் உரிமை, வளர்ச்சி உரிமை, பாதுகாப்பு உரிமை, பங்கேற்பு உரிமை உள்ளிட்டவைகள் மிகவும் முக்கியமானது. நாட்டில் நடக்கும் எந்த பிரச்னைகள் குறித்தும் குழந்தைகளிடம் கருத்துக் கேட்பதே இல்லை. எனவே குழந்தைகளுக்கான ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு ஜனநாயகம் குறித்தும், எதிர்கால முன்னேற்றம் குறித்தும், உரிமைகள் குறித்தும் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த அமைப்பில் மதுரை அருகே மேலவாசல், திடீர்நகர், அலாவுதின்புரம், அவனியாபுரம், முத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த குடிசை வாழ் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளுக்கு கல்வி மட்டுமல்லாது, ஆளுமை பயிற்சியும் அளிப்பதே இந்த குழந்தைகள் அமைப்பின் நோக்கம் என்றார். விடியல் குழந்தை உரிமைகள் இயக்கத்தின் தலைவர் ஏ.சித்ராதேவி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com