தேசிய குடற்புழு நீக்க நாள்: மாணவர்களுக்கு மாத்திரைகள் விநியோகம்
By DIN | Published On : 09th August 2019 09:23 AM | Last Updated : 09th August 2019 09:23 AM | அ+அ அ- |

மதுரையில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
மதுரை மருத்துவர் டி.திருஞானம் தொடக்கப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் நிகழ்ச்சிக்கு பள்ளிச்செயலர் சதாசிவம் தலைமை வகித்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணன் குடற்புழு நீக்கம் குறித்து பேசியது, குடலில் புழுக்கள் பல்கிப் பெருகும்போது பசியின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு, சோர்வு, உடல் பலவீனம், ரத்தச்சோகை ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதை கட்டுப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி குடற்புழு தினமாக அரசு கடைப்பிடித்து வருகிறது. இந்த தினத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக பள்ளிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.
இதன் மூலம் ரத்தசோகை நீக்கப்பட்டு குழந்தைகளின் அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சி மேம்படுகிறது என்றார்.
இதையடுத்து மாணவ, மாணவியருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. முன்னதாக துணைத்தலைவர் உதயகுமார் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் பகவதி, ஆசிரியர்கள் கீதா, பிரேமலதா சரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.