சுடச்சுட

  

  சுதந்திரதினத்தை முன்னிட்டு மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு சோதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
   இதில் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளர் முகேஷ்குமார், வெடிகுண்டு சோதனைப் படை காவல் ஆய்வாளர் வி.கே.பாலு, ரயில்வே காவல் ஆய்வாளர் யேசுராஜா ஆகியோர் தலைமையில் மதுரை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை நடைபெற்றது.   ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதி, நடைமேடைகள், ரயிலுக்காக காத்திருந்த பயணிகளின் உடைமைகள், ரயில் பெட்டிகள் அனைத்திலும் சோதனை நடத்தப்பட்டன. இதற்கு ஆஸ்டின், ரோவர் என்ற 2 மோப்பநாய்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பாக பயணிக்கும் வழிமுறைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai