சுடச்சுட

  

  இனிப்பு இல்லாத பால்கோவா, மில்க் சாக்லேட் மதுரை ஆவினில் புதிய அறிமுகம்

  By DIN  |   Published on : 15th August 2019 10:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுரை ஆவின் நிறுவனம் இனிப்பு இல்லாத பால்கோவா, மில்க் சாக்லேட் ஆகியவற்றை சோதனை அடிப்படையில்  புதன்கிழமை அறிமுகம் செய்துள்ளது.
  மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் (ஆவின்) 29-ஆவது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆவின் தலைவர் ஓ.ராஜா தலைமை வகித்தார். பொதுமேலாளர் சி.ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார். உதவிப் பொதுமேலாளர் எஸ்.வேலுசாமி, ஆவின் அதிகாரிகள் எஸ்.சரவணமுத்து, என்.பாலகுரு மற்றும் நிர்வாகக் குழு இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
   இந்த பொதுக் குழுக் கூட்டத்தின் போது, மதுரை ஆவினின் புதிய தயாரிப்புகளான இனிப்பு இல்லாத பால்கோவா, மில்க் சாக்லேட் ஆகியன அறிமுகம் செய்யப்பட்டன.
   சோதனை அடிப்படையில்  அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இரு தயாரிப்புகளும் இன்னும் ஒரு மாதத்தில் முழு அளவில் விற்பனைக்கு கிடைக்கும் என ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
  மதுரை ஆவின் நிறுவனம் சார்பில் நெய், வெண்ணெய், பால் பவுடர், பால்கோவா, லட்டு, மில்க் ஷேக் உள்ளிட்ட பால் உபபொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது இனிப்பு இல்லாத பால்கோவா, மில்க் சாக்லேட் ஆகியன விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது என்றும் அவர்கள் கூறினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai