சுடச்சுட

  

  மதுரை காமராஜர் பல்கலைக் கழக "பி' மண்டல அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் சரசுவதி நாராயணன் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 
        திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் நாக் அவுட் முறையில் நடந்த இப்போட்டியில் 8 கல்லூரிகள் பங்கேற்றன. இதில் பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரி சார்பில் விளையாடிய  பி.பி.ஏ 2 ஆம் ஆண்டு மாணவர் அமர்நாத் கால் இறுதிப் போட்டியில் வெள்ளைசாமி நாடார் கல்லூரி அணியை வென்றார். 
       அரையிறுதி போட்டியில் மன்னர் கல்லூரி அணியை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிப் போட்டியில் தியாராசர் மேலாண்மை கல்லூரி அணியை வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
   "பி' மண்டல அளவில் சாம்பியன் பட்டம் வென்ற சதுரங்க வீரர் அமர்நாத் மதுரை காமராஜர் பல்கலைக் கழக சதுரங்க அணிக்கு தேர்வாகியுள்ளார்.  சாம்பியன் பட்டம் வென்ற மாணவர் அமர்நாத்தை சரசுவதி நாராயணன் கல்லூரி முதல்வர் மு.கண்ணன், துணை முதல்வர் கே.கிருஷ்ணன், வணிகவியல் துறைத் தலைவர் ஜெயக்கொடி மற்றும் உடற்கல்வி இயக்குநர் யுவராஜ் ஆகியோர் பாராட்டினர். 


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai