சுடச்சுட

  

  மதுரையில் யூனியன் வங்கியின் சார்பில் வாடிக்கையாளர் சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்தும் வகையில் எம்எஸ்எம்இ ஆதரவுத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2018 நவம்பரில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ள 102 முன்னணி மாவட்டங்களில் மதுரையும் ஒன்று.  இந்நிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடனுதவி வழங்குவதில் முன்னணியில் உள்ள யூனியன் வங்கியின் சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் வங்கி வாடிக்கையாளர்கள் சந்திப்பு மதுரையில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் எம்.ராமலிங்கம், மடீட்சியா அமைப்பின் தலைவர் கே.பி.முருகன், யூனியன் வங்கியின் மண்டலத்தலைவர் ஸ்ரீனிவாஸ் வெங்கலா மற்றும் வங்கி அதிகாரிகள், தொழிலதிபர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு யூனியன் வங்கி சார்பில் அளிக்கப்படும் கடனுதவிகள், கடன் திட்டங்கள், அதற்கான விதிமுறைகள் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai