Enable Javscript for better performance
மதுரை மத்திய சிறையில் 200 போலீஸார் திடீர் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மத்திய சிறையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் வெள்ளிக்கிழமை  திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
     மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என 1500-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இங்கு சிறையில் போலீஸாருக்கு தெரியாமல் செல்லிடப்பேசிகள், புகையிலை பொருள்கள், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு பொருள்களைக் கொண்டு வந்து பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், அவ்வப்போது போலீஸார் திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
    அந்த வகையில், வெள்ளிக்கிழமை மதுரை சரக சிறைத்துறை துணை தலைவர் டி. பழனி, மதுரை மத்திய சிறை காவல் கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தப்பட்டது. திலகர் திடல் காவல் உதவி ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) வெற்றிச் செல்வன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் கைதிகளின் அறைகள், சமையல் செய்யும் அறைகள், குளியல் அறைகள் உள்ளிட்ட சிறை வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தினர்.
    இந்த சோதனையில் புகையிலை பொருள்கள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த சோதனை 5 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்றது. அப்போது மத்திய சிறையின் கதவுகள் அடைக்கப்பட்டு, சோதனை முடியும் வரை யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai