Enable Javscript for better performance
மதுரை மருத்துவக் கல்லூரி முதன்மையர்  உள்பட 7 அரசு மருத்துவர்களுக்கு விருது- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மருத்துவக் கல்லூரி முதன்மையர்  உள்பட 7 அரசு மருத்துவர்களுக்கு விருது

    By DIN  |   Published on : 24th August 2019 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மருத்துவக்கல்லூரி முதன்மையர் உள்பட 7 மருத்துவர்களுக்கு, சிறந்த மருத்துவருக்கான விருதுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
     தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் சார்பில் சிறந்த மருத்துவர்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறந்த மருத்துவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
    இதில், மதுரை மருத்துவக் கல்லூரி முதன்மையர் கே. வனிதா மற்றும் 6 மருத்துவர்களுக்கு சிறந்த மருத்துவர்களுக்கான விருது கிடைத்தது.  நரம்பியல் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக மருத்துவர் ஜஸ்டின், சிறப்பான ரத்த வங்கி சேவைக்கு மருத்துவர் சிந்தா, மகளிர் நோய் மருத்துவவியலில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் சுமதி, குழந்தைகள் நோய் அறுவை சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் ஹேமந்த் குமார், இருதயவியல் துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் வீரமணி மற்றும்  மயக்கவியல் துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் கல்யாணசுந்தரம் ஆகியோருக்கு சிறந்த மருத்துவர்களுக்கான விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai