சுடச்சுட

  

  விமான ஓடுதளத்தில் இறங்குவதில் சிக்கல்? மதுரையில் தரை இறங்க வேண்டிய விமானம் மீண்டும் வானத்தில் பறந்ததால் பயணிகள் அதிர்ச்சி

  By DIN  |   Published on : 30th August 2019 10:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  airport

  சென்னையிலிருந்து வியாழக்கிழமை மதுரை வந்த விமானம் தரை இறங்காமல் மீண்டும் வானத்தில் பறந்து, சுமார் 15 நிமிடங்கள் வட்டமடித்துவிட்டு தாமதமாக தரையிறங்கியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். 
  சென்னையிலிருந்து பயணிகள் விமானம் ஒன்று வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு மதுரை வந்தது. விமான நிலையத்தில் தரையிறங்கும் வேளையில் அந்த விமானம் தரையிறங்காமல் மீண்டும் மேலே சென்று வட்டமடித்து 15 நிமிட தாமதத்திற்கு பின் விமான நிலையத்தில் தரையிறங்கியது. 
  இந்த நிகழ்வால் விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். விமானத்தில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார், நடிகை ராதிகா, முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
  இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியது:  சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் மதுரை வந்து  தரையிறங்கும் நேரத்தில், மீண்டும் சுமார் ஆயிரம் அடிக்கு மேல் உயர பறந்துவிட்டு.  சுமார் 15 நிமிடம் தாமதமாக தரையிறங்கியது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டேன். விமானம் தரையிறங்கும்போது விமான ஓடுதளத்தில் (ரன்வே) இருந்து சற்று விலகியதால் மீண்டும்  மேலே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றனர். இந்த விஷயத்தில் விமானியின் சமார்த்தியத்தை பாராட்டுகிறேன். 
  அதேசமயம்  இது விமானியின் தவறா,  அல்லது ஏடிசி டவர் மீது தவறா என தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai