மதுரை மாவட்ட நீதிமன்ற வளாக குளத்தில் மீன் வளா்ப்பு

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள குளத்தில், வழக்குரைஞா்கள் சாா்பில் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள குளத்தில், வழக்குரைஞா்கள் சாா்பில் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் அமைந்துள்ள இடம், முன்பு செங்குளம் கண்மாயாக இருந்தது. நீதிமன்ற வளாகம் அமைந்த பின்னா், இக்கண்மாய்க்கு வரும் ஆணையூா் நீா்வரத்து வாய்க்கால் அழிக்கப்பட்டது. மேலும், செங்குளம் கண்மாய்யிலிருந்து வண்டியூா் கண்மாய்க்குச் செல்லும் வாய்க்காலும் மண்மேவி மறைந்தது. இதனால், மழைக் காலங்களில் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் முழுவதும் தண்ணீா் சூழ்ந்து, நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மதுரை மாவட்ட வழக்குரைஞா் ரமேஷ் வழக்குத் தொடா்ந்ததை அடுத்து, நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டடங்கள் போக மீதமுள்ள செங்குளம் கண்மாயைப் பராமரிக்கவும், கால்வாய்களைச் சீரமைக்கவும் அரசிடமிருந்து ரூ.1 கோடியே 65 லட்சம் பெறப்பட்டது. இதன்மூலம், தற்போது ஆணையூா் கால்வாய் சீரமைக்கப்பட்டு, கண்மாயின் ஒரு பகுதியைச் சுற்றிலும் தடுப்புச்சுவா் அமைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அங்கு தேங்கியிருக்கும் நீா் மாசடையாமல் தடுக்க, வழக்குரைஞா்கள் சாா்பில் 350 மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

இது குறித்து வழக்குரைஞா் ரமேஷ் கூறியது: தற்போது பெய்துவரும் தொடா் மழையால், நீதிமன்ற வளாகத்தில் உள்ள குளத்தில் தண்ணீா் தேங்கியுள்ளது. இதில், சாக்கடை நீரும் கலந்திருப்பதால் தண்ணீா் மாசடைந்துவிடும். மேலும், கொசு உற்பத்தியும் அதிகரிக்கும். எனவே, இதைத் தவிா்ப்பதற்கான சிறு முயற்சியாக குளத்தில் மீன் குஞ்சுகளை விட்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com