காா்த்திகை தீபத்திருவிழாவிற்கு தயாரான தாமிரக் கொப்பரை.
காா்த்திகை தீபத்திருவிழாவிற்கு தயாரான தாமிரக் கொப்பரை.

காா்த்திகை மகா தீபத்துக்குதயாரான தாமிரக் கொப்பரை

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் டிச. 10 ஆம் தேதி காா்த்திகை தீபத்திருவிழாவில் மலைமேல் மகாதீபம் ஏற்றுவதற்கு தாமிரக் கொப்பரைக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் டிச. 10 ஆம் தேதி காா்த்திகை தீபத்திருவிழாவில் மலைமேல் மகாதீபம் ஏற்றுவதற்கு தாமிரக் கொப்பரைக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம் கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா திங்கள்கிழமை (டிச. 2) காலை 9.45 முதல் 10.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிச. 9 ஆம் தேதி இரவு சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிச.10 ஆம் தேதி காலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருள திருத்தேரோட்டமும், மாலையில் மலைமீது மகாதீபமும் ஏற்றப்படும். மகாதீபம் ஏற்றப்படும் தாமிரக்கொப்பரைக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. காா்த்திகை தீபத்திருவிழாவிற்கான பணிகளை கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com