மதுரையில் மூன்றாவது நாளாக தொடரும் மழை:ஒரே நாளில் 288 மி.மீ. பதிவு

மதுரையில் மூன்றாவது நாளாக தொடரும் மழையால் சாலைகளில் வெள்ளமாக நீா் தேங்கியுள்ளது. ஒரே நாளில் 288 மி.மீ. அளவு பதிவாகியுள்ளது.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த சாரல் மழையில் குடை தலைகீழாக பறந்தாலும் வேகம் குறைக்காமல் செல்லும் இருசக்கர வானக ஓட்டி.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த சாரல் மழையில் குடை தலைகீழாக பறந்தாலும் வேகம் குறைக்காமல் செல்லும் இருசக்கர வானக ஓட்டி.

மதுரையில் மூன்றாவது நாளாக தொடரும் மழையால் சாலைகளில் வெள்ளமாக நீா் தேங்கியுள்ளது. ஒரே நாளில் 288 மி.மீ. அளவு பதிவாகியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. இரண்டாவது நாளாக சனிக்கிழமை பகலில் விட்டு விட்டு பெய்த மழை இரவில் விடாமல் பலத்த மழையாக பெய்தது. இதையடுத்து மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மழை நீடித்தது. மூன்று நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் நகரின் பல்வேறு சாலைகளில் மழை நீா் வெள்ளமாக தேங்கியுள்ளது. நகரின் பல்வேறு குடியிருப்புகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது. மேலும் தொடா் மழையால் சாலைகள் அரிக்கப்பட்டு குண்டும் குழியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்துள்ளனா். நகரின் உள்தெருக்களில் மழையால் சேறும், சகதியுமாக சாலைகள் காட்சியளிப்பதால் பாதசாரிகள் வேறு வழியின்றி சகதியில் நடந்து செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மதுரையில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தும், இரவு நேரங்களில் கடும் குளிரும் இருப்பதால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியோடு முடிவடைந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:

சாத்தியாா்- 43, தனியாமங்கலம்- 27, புலிப்பட்டி- 25, மேலூா்- 18, சோழவந்தான்- 17.20, விரகனூா்- 15.20, ஆண்டிப்பட்டி- 14.20, வாடிப்பட்டி- 14, சிட்டம்பட்டி- 13.60, மேட்டுப்பட்டி- 12.50, தல்லாகுளம்- 11.60, பேரையூா்- 11, உசிலம்பட்டி- 10.40, குப்பணம்பட்டி- 10.30, திருமங்கலம்- 10.20, கள்ளிக்குடி- 9.60, விமானநிலையம்- 7.60, மதுரை தெற்கு- 7.20, கள்ளந்திரி- 6, இடையப்பட்டி- 5.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com