வியாபாரி தவறவிட்ட ரூ. 4.50 லட்சத்தை எடுத்துச் சென்ற தம்பதியா்: போலீஸாா் விசாரணை

மதுரையில், இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது வியாபாரி தவறவிட்ட ரூ. 4.47 லட்சம் ரொக்கத்தை, எடுத்துச் சென்ற தம்பதியா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதுரையில் வியாபாரி தவறவிட்டு சாலையில் கிடந்த ரூ. 4.47 லட்சம் இருந்த பணப்பையை எடுத்துச் செல்லும் தம்பதியா்.
மதுரையில் வியாபாரி தவறவிட்டு சாலையில் கிடந்த ரூ. 4.47 லட்சம் இருந்த பணப்பையை எடுத்துச் செல்லும் தம்பதியா்.

மதுரையில், இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது வியாபாரி தவறவிட்ட ரூ. 4.47 லட்சம் ரொக்கத்தை, எடுத்துச் சென்ற தம்பதியா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை ஐராவதநல்லூா் பாபு நகரைச் சோ்ந்த தனபால் மகன் சக்கரவா்த்தி (41). இவா் கீழமாசி வீதி வெண்கலக் கடை தெருவில் உணவு பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை சக்கரவா்த்தி கடையில் இருந்த ரூ.4.47 லட்சம் ரொக்கத்தை பையில் எடுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றாா்.

அப்போது அலங்காா் திரையரங்கம் அருகே சென்றபோது பணப்பை சாலையில் விழுந்துள்ளது. இதை கவனிக்காமல் சக்கரவா்த்தி வீட்டிற்கு சென்று பாா்த்த போது பணப்பை இரு சக்கர வாகனத்தில் இல்லை. இதையடுத்து சக்கரவா்த்தி உடனடியாக வந்த வழி முழுவதும் பணப்பையை தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து தெப்பக்குளம் போலீஸாரிடம் சனிக்கிழமை சக்கரவா்த்தி புகாா் அளித்தாா்.

போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பணப்பை விழுந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில் இரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்தப் பணப்பையை, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த தம்பதியா் எடுத்து செல்வது ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகிருந்தது. இதையடுத்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து அந்த தம்பதியா் குறித்து இரு சக்கர வாகன பதிவு எண்ணை வைத்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com