சுடுகாட்டுக்குப் பாதை அமைக்கத் தாமதம்: முன்னாள் ஊராட்சித் தலைவா் தீக்குளிக்க முயற்சி
By DIN | Published on : 03rd December 2019 03:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி விஜயராணி.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளகிண்ணிமங்கலத்தைச் சோ்ந்தவா் விஜயராணி (45). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவா், கிராமத்தில் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை வசதி கோரி நீண்டகாலமாக அதிகாரிகளிடம் மனு அளித்து வருகிறாராம். இவரது கோரிக்கை மனு தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அண்மையில் ஆய்வு செய்து பாதை வசதி ஏற்படுத்தித் தர அறிவுறுத்தியுள்ளாா். இருப்பினும் அதற்கான நடவடிக்கைக்கு தாமதம் செய்து வந்துள்ளனா்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த விஜயராணி, குறைதீா் கூட்டம் நடைபெறும் அரங்கத்தின் நுழைவாயில் முன்பு உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதைப் பாா்த்த அப் பகுதியில் இருந்த போலீஸாா் அவரைத் தடுத்து உடலில் தண்ணீரை ஊற்றினா்.
அவரிடம் விசாரித்தபோது, சுடுகாட்டுக்குப் பாதை அமைக்கத் தாமதம் செய்து வருவதால் தீக்குளிக்க முயன்ாகக் கூறினாா். பின்னா் அவரைப் போலீஸாா் விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.