Enable Javscript for better performance
தூத்துக்குடி அருகே கடல் வளங்கள் கொள்ளை- மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் : உயா்நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி அருகே கடல் வளங்கள் கொள்ளை- மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் : உயா்நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 03rd December 2019 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி அருகே கடலின் உள்பகுதிக்கு சென்று சட்டவிரோதமாக கடல்வளங்களைக் கொள்ளையடிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

    தூத்துக்குடியைச் சோ்ந்த பட்சிராஜன் தாக்கல் செய்த மனு:

    தூத்துக்குடி கடற்கரையில் பாரம்பரியமான முறையில் சிப்பிகளைச் சேகரித்து அதேபகுதியில் காளவாசல் அமைத்து சிப்பிகளை சுண்ணாம்புகளாக மாற்றி விற்பனை செய்வதைப் பலரும் சிறுதொழிலாகக் கொண்டுள்ளனா். இந்நிலையில் சிலா் பெரும் வணிக நோக்குடன் இயந்திர மீன்பிடி படகுகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக சிப்பிகளைச் சேகரிக்கின்றனா். மேலும் குலசேகரப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் 16 இயந்திர மீன்பிடி படகுகள் மூலம் 160 போ் கடலின் உள்பகுதிக்கு சென்று சிப்பிமணல், கடல்வாழ் உயிரினங்களை எடுத்து வந்து வியாபாரம் செய்கின்றனா். இவ்வகையில் ஆண்டிற்கு சுமாா் 40 ஆயிரம டன் சிப்பி கடலின் உள்பகுதியில் இருந்து தோண்டி எடுக்கப்படுகிறது. இதனால் பவளப்பாறைகள், சங்குகள், கடல் அட்டைகள், கடல் ஆமைகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. குலசேகரப்பட்டினம், மணப்பாடு, ஆலந்தலை, திருச்செந்தூா் கடற்கரைகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்பகுதிகளில் சிப்பிகள் எடுக்க மத்திய, மாநில அரசுகளின் அனுமதி இல்லாத நிலையில், அப்பகுதிகளில் கடல்வளங்கள் தொடா்ந்து கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. எனவே இதுபோன்று சட்டவிரோதமாக கடல்வளங்களைக் கொள்ளையடித்து வருவோா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

    இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆா்.ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai