Enable Javscript for better performance
மாட்டுத்தாவணி பேருந்து நிலைய மராமத்து பணி:விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையா் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    மாட்டுத்தாவணி பேருந்து நிலைய மராமத்து பணி:விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையா் உத்தரவு

    By DIN  |   Published on : 03rd December 2019 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய மராமத்துப் பணிகளை விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் உத்தரவிட்டாா்

    மதுரை மாநகராட்சி மண்டலம் 2-இல் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகளை மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதில், குருவிக்காரன் சாலை ஜட்காத்தோப்பு பகுதியில் ரூ.17.59 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாா்ச்சாலை, மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆா்.பேருந்து நிலையத்தில் ரூ.14.49 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மராமத்து மற்றும் வா்ணம் பூசும் பணிகளை ஆய்வு செய்தாா்.

    மேலும் வைகை ஆற்றின் தெற்குகரைப்பகுதியில் உள்ள பனையூா் கால்வாயிலிருந்து வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் கொண்டு செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் இணைப்பு வாய்க்கால் கட்டும் பணியையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

    ஆய்வின் போது நகரப்பொறியாளா் அரசு, செயற்பொறியாளா் ராஜேந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai