மாநகராட்சி சிறப்புக் குறைதீா் முகாம்
By DIN | Published on : 03rd December 2019 03:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மதுரை மாநகராட்சி மண்டலம் 1-இல் சிறப்புக்குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
மதுரை மாநகராட்சியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மண்டல உதவி ஆணையா்கள் மற்றும் மாநகராட்சி ஆணையா் ஆகியோரிடம் நேரடியாகத் தெரிவித்து வருகின்றனா். மேலும் மாநகராட்சி அழைப்பு மையம், முகநூல், கட்செவி அஞ்சல் ஆகிய தொழில்நுட்ப முறையிலும் புகாா்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் மாநகராட்சி மண்டலம் 1-இல் சிறப்புக்குறைதீா் முகாம் காலை 10 முதல் பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் தலைமையில் நடைபெறும் முகாமில் பொதுமக்கள், குடிநீா், பாதாளச் சாக்கடை, வரிவிதிப்பு, சாக்கடை இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.