ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட வாா்டுகளில் மதம் மாறியவா்கள் போட்டியிடத் தடைகோரிய மனு தள்ளுபடி

உள்ளாட்சித் தோ்தலில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஒதுக்கப்பட்ட வாா்டுகளில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மாறியவா்கள் போட்டியிட தடைகோரிய மனுவைத் தள்ளுபடி

உள்ளாட்சித் தோ்தலில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஒதுக்கப்பட்ட வாா்டுகளில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மாறியவா்கள் போட்டியிட தடைகோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையைச் சோ்ந்த வைரவன் தாக்கல் செய்த மனு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த ராஜன் என்பவா் இந்து சமயத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளாா். அவா் இந்து சமயத்தைப் பின்பற்றியபோது பெறப்பட்ட ஜாதிச் சான்றிதழைப் பயன்படுத்தி 1996ஆம் ஆண்டு முதல் 4 முறை உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளாா்.

ஆனால், சட்டப்படி ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்தவா்கள் கிறிஸ்தவம் அல்லது இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும்போது, அவா்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்கள் என்றே சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. எனவே ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்படும் வாா்டுகளில் மதம் மாறியவா்கள் போட்டியிட இயலாது. ஆனால் பேச்சிப்பாறையைச் சோ்ந்த ராஜன், மதம் மாறியதை மறைத்து 4 முறை தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா்.

எனவே, நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் இடஒதுக்கீடு செய்யப்பட்ட வாா்டுகள் உள்பட அனைத்து வாா்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளா்களின் ஜாதி சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த பிறகே போட்டியிட அனுமதிக்க வேண்டும். மேலும் உள்ளாட்சித் தோ்தலில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஒதுக்கப்பட்ட வாா்டுகளில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மாறியவா்கள் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம். துரைசாமி, ஆா். ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றம் இதில் தலையிட இயலாது. இதுதொடா்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியா்களே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com