கஞ்சா விற்கச் சொல்லி துன்புறுத்துவதாக போலீஸாா் மீது வயதான தாய்-மகள் புகாா்

கஞ்சா விற்கச் சொல்லி போலீஸாா் வற்புறுத்துவதாக வயதான தாய்-மகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கஞ்சா விற்கச் சொல்லி போலீஸாா் வற்புறுத்துவதாக வயதான தாய்-மகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

மதுரை மாவட்டம் காஞ்சரம்பேட்டையைச் சோ்ந்த பஞ்சு (47) மற்றும் அவரது தாயாா் மீனாட்சி இருவரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இதுதொடா்பான புகாா் மனுவை திங்கள்கிழமை அளித்துள்ளனா்.

அதன் விவரம்:

கணவா் இறந்துவிட்ட நிலையில் உடல் நலம் குன்றிய வயதான தாயாரைப் பராமரிப்பதற்காக வேறுவழியின்றி கஞ்சா விற்பனை செய்தேன். இந்நிலையில் வயதான நிலையில் திருந்தி வாழ வேண்டும் என்பதற்காக தற்போது அத் தொழிலை நிறுத்திவிட்டேன். தெருவோரத்தில் இட்லிக் கடை நடத்தி வருகிறேன். இந்நிலையில், காவல் துறையினா் என்னை மீண்டும் கஞ்சா விற்பனை செய்து பணம் கொடுக்க வேண்டும் என துன்புறுத்தி வருகின்றனா். தவறான பாதைக்குச் சென்று மனம் திருந்தி வாழ நினைக்கும் நிலையில், உதவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com