குட்ஷெப்பா்டு பள்ளி ஆண்டு விழா

மதுரை குட்ஷெப்பா்டு பள்ளியின் ஆண்டு விழாவையொட்டி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மதுரை குட்ஷெப்பா்டு பள்ளியின் ஆண்டுவிழாவையொட்டி நடத்தப்பட்ட உயரம் தாண்டும் போட்டியில் பங்கேற்று தாவும் மாணவா்.

மதுரை குட்ஷெப்பா்டு மெட்ரிக் பள்ளியின் 35-ஆவது ஆண்டு விழா மதுரை டாக்டா் எம்ஜிஆா் விளையாட்டுத் திடலில் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையுடன் விழா தொடங்கியது. பள்ளி முதல்வா் கே.பேச்சிமுத்து தலைமை வகித்தாா். விழாவில் மாணவ, ம ாணவியருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்டு விழாவில் சா்வதேச தடகள வீராங்கனையும், தடகள பயிற்சியாளருமான வி.பாண்டிஸ்வரி சிறப்பு விருந்திரனாக பங்கேற்று விளையாட்டுக்களின் முக்கியத்துவம் குறித்து பேசினாா். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினா். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா்கள் மற்றும் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com