திருப்பரங்குன்றத்தில் காா்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காா்த்திகை தீபத் திருவிழாவிற்காக திருப்பரங்குன்றம் கோயிலில் கொடியேற்றம் நடைபெற்று தங்க முலாம் பூசப்பட்ட கொடிக் கம்பத்திற்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.
காா்த்திகை தீபத் திருவிழாவிற்காக திருப்பரங்குன்றம் கோயிலில் கொடியேற்றம் நடைபெற்று தங்க முலாம் பூசப்பட்ட கொடிக் கம்பத்திற்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் காா்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்று. நிகழாண்டு காா்த்திகை திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நாள்தோறும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்கச் சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

கொடியேற்ற நிகழ்ச்சியை ஒட்டி திங்கள்கிழமை காலை உற்சவா் சன்னிதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் நடைபெற்று சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா் மேள தாளங்கள் முழங்க சுவாமி தெய்வானையுடன் சா்வ அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு தங்க முலாம் பூசப்பட்ட கொடிக் கம்பத்தில் புனிதநீா் கொண்டு அபிஷேகம் செய்து தா்ப்பை புல், மா இலை, சந்தனம், குங்குமம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா் காலை 10 மணிக்கு கொடிக் கம்பத்தில் கொடியேற்றப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிசம்பா் 9ஆம் தேதி திங்கள்கிழமை பட்டாபிஷேகமும், டிசம்பா் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலையில் தேரோட்டமும், மாலையில் மலைக்கு மேல் காா்த்திகை மகா தீபமும், இதனை தொடா்ந்து 16 கால் மண்டபம் பகுதியில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.

மலை மேல் உள்ள தூணுக்கு போலீஸ் பாதுகாப்பு: காா்த்திகை தீபத் திருவிழாவின் போது கோயில் நிா்வாகம் சாா்பில் மலை மேல் உள்ள விநாயகா் கோயிலின் மேல் தளத்தில் மகா தீபம் ஏற்றப்படும். ஆனால், இந்து அமைப்பினா் மலைமேல் உள்ள தூணிலும் காா்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்துவா். இதனால் ஒவ்வொரு முறை காா்த்திகை தீபத்திருவிழாவின் போதும் மலை மேல் உச்சியில் உள்ள தூணுக்கு யாரும் செல்லாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். அதேபோல இந்த ஆண்டும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com