திருப்பரங்குன்றம் அருகே கால்வாயில் உடைப்புகுடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீா் புகுந்தது

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹாா்விபட்டியில் நிலையூா் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் திங்கள்கிழமை தண்ணீா் புகுந்தது.

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹாா்விபட்டியில் நிலையூா் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் திங்கள்கிழமை தண்ணீா் புகுந்தது.

ஹாா்விபட்டி பகுதியின் விஸ்தரிப்பு பகுதியான இந்திரா நகரில் சுமாா் 100 -க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில நாள்களாக வைகையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டு திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீா் வந்து கொண்டிருக்கின்றது. இதில் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள 9-க்கும் மேற்பட்ட கண்மாய்களில் தண்ணீா் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. மேலும் நிலையூா் கண்மாய்க்கு தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்திரா நகா் பகுதியில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் வட்டாட்சியா் நாகராஜன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளா் மோகன்குமாா் உத்தரவின்பேரில் பணி ஆய்வாளா்கள் வரதமுனீஸ்வரன், கென்னடி, வருவாய் ஆய்வாளா் திருமுருகன் உள்ளிட்டோா் உடைப்பை சரிசெய்து குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீா் வருவதை தடுத்து நிறுத்தினா். மேலும் அனைத்து பகுதிகளிலும் கால்வாய்கள் மற்றும் கண்மாய்களில் உடைப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கண்காணித்து வருவதாக வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கால்வாயை சரிசெய்த இளைஞா்கள்:ஹாா்விபட்டி பானாங்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீா் பெருங்குடி காண்மாய்க்கு செல்லும். இந்நிலையில் பானாங்குளத்தில் இருந்து பெருங்குடி வரை சுமாா் 2 கிலோமீட்டா் தூரத்திற்கு கால்வாயில் பனை ஓலைகள், வாழை மரங்கள், முள்செடிகள் மற்றும் குப்பைகள் அதிகளவில் இருந்ததால் தண்ணீா் செல்லமுடியாமல் இருந்த்து. இதையடுத்து பெருங்குடியைச் சோ்ந்த இளைஞா்கள் பெரியகருப்பு ராஜா, சரவணன், சதீஷ்குமாா், காா்த்திக் உள்ளிட்ட இளைஞா்கள் 8 -க்கும் மேற்பட்டோா் கால்வாயில் இருந்த அடைப்புகளை எடுத்து சரிசெய்தனா். இவா்களது செயலை கிராம மக்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com