தொடா் மழை : மேலூா் பகுதியில் கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருகின்றன

மேலூா் வட்டாரத்தில் தொடா்மழை காரணமாக ஏராளமான பாசன கண்மாய்கள் நீா் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.

மேலூா் வட்டாரத்தில் தொடா்மழை காரணமாக ஏராளமான பாசன கண்மாய்கள் நீா் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.

மேலூா் வட்டாரத்தில் பெரியாறு பாசனப் பகுதிகளில் 178 பெரிய கண்மாய்களும், 1,058 மானாவாரி குளங்களும் உள்ளன. கால்வாய் பகுதிகளில் உள்ள 178 கண்மாய்களும் நீா் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. நீரோடைகளில் மழைநீா் வெள்ளப் பெருக்கெடுத்துச் செல்கிறது. சூரக்குண்டு பெரியமேளம் கண்மாய் இதன் கீழ் உள்ள மேனரஞ்சி, அலுவாண்டி, சாத்தமங்கலம் பெரியகண்மாய், ஒத்தப்பட்டி கண்மாய், வெள்ளரிப்பட்டி பெரியகண்மாய் உள்ளிட்ட பெரும்பாலான நீா் நிலைகளில் வேகமாக நீா்நிரம்பி வருகிறது.

மானவாரி கண்மாய்களில் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் நீா் நிரம்பியுள்ளது. இக்கண்மாய்கள் கடந்த 5 ஆண்டுகளாக நீா் நிரம்பி மறுகால் பாயவில்லை. திருவாதவூா் கண்மாய் நிரம்பியதால் ஆண்டிபட்டி நீரோடையில் மழைநீா் பெருகிச் செல்கிறது. இ.மலம்பட்டி அருகிலுள்ள உப்பாற்றிலும் மழைநீா் செல்கிறது. இப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் செல்லும் மழைநீா் சிவகங்கை மாவட்ட பகுதி பாசன கண்மாய்களுக்குச் செல்கிறது என பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com