Enable Javscript for better performance
அனுமதியின்றி உடைகற்கள் ஏற்றிவந்த லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி உடைகற்கள் ஏற்றிவந்த லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

    By DIN  |   Published on : 04th December 2019 06:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலூா்: கொட்டாம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி உடைகற்கள் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

    கொட்டாம்பட்டி அருகே காடம்பட்டி விலக்கில் உதவி புவியியல் ஆய்வாளா் பாண்டியராஜா தலைமையில் புவியியல்துறையினா் செவ்வாய்க்கிழமை மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது உடைகற்கள் ஏற்றிவந்த லாரியை சோதனையிட்டனா். அதில் உரிய அனுமதி ஆவணங்கள் எதுவும்இல்லை. இதனால், லாரியை கொட்டாம்பட்டி போலீஸில் ஒப்படைத்தனா்.

    போலீஸாா், லாரி ஓட்டுநா் செக்கடிப்பட்டியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (33) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai