உறங்கான்பட்டியில் நாளை மின்தடை
By DIN | Published on : 04th December 2019 06:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மேலூா்: உறங்கான்பட்டியில் வியாழக்கிழமை (டிச.5) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உறங்கான்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை ( டிச.5) நடைபெறவுள்ளது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என மதுரைகிழக்கு மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் இரா.கண்ணன் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:உறங்கான்பட்டி, தொழில்பேட்டை, வரிச்சியூா், களிமங்கலம், குன்னத்தூா், சக்குடி, செங்கோட்டை, தச்சனேந்தல், காா்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகள்.