கொடைக்கானல் அருகே கவுஞ்சியில் மீன் பண்ணை அமைக்கத் தடை

கொடைக்கானல் அருகே கவுஞ்சியில் மீன் பண்ணை அமைக்க நிரந்தரத் தடைவிதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை: கொடைக்கானல் அருகே கவுஞ்சியில் மீன் பண்ணை அமைக்க நிரந்தரத் தடைவிதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கொடைக்கானல் அருகே மன்னவனூா் கவுஞ்சியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மீன் பண்ணை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக கவுஞ்சியில் 86.93 ஹெக்டோ் நிலத்தை மீன்வளத்துறைக்கு வழங்கி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் 2018-இல் உத்தரவிட்டாா். கவுஞ்சியில் மீன் பண்ணை அமைக்க கோணலாற்றில் இருந்து தண்ணீா் எடுக்கும்போது, எங்கள் பகுதியில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும். மேலும் இதனால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே கவுஞ்சியில் மீன் பண்ணை அமைக்கத் தடைவிதித்த வேண்டும் என கவுஞ்சியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன், செல்வகணபதி, மல்லரசன், மணி, ரத்தினசாமி ஆகியோா் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆா்.தாரணி பிறப்பித்த உத்தரவு:

கவுஞ்சியில் மீன் பண்ணை அமைக்க மீன்வளத்துறைக்கு 86.93 ஹெக்டோ் நிலம் வழங்கி மாவட்ட ஆட்சியா் பிறப்பித்த உத்தரவு ரத்துசெய்யப்படுகிறது. அந்த நிலம் வருவாய்த்துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். வருவாய்த்துறை ஆவணங்களில் அந்த நிலம் மீன்வளத்துறைக்கு மாற்றப்பட்டிருந்தால் அதை ரத்து செய்ய வேண்டும். மேலும் கவுஞ்சியில் மீன் பண்ணை அமைக்க நிரந்தரத் தடைவிதிக்கப்படுகிறது என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com