திருப்பரங்குன்றம் அருகே பிடிபட்ட இரு தலை மணியன் பாம்பு மாயம்: திருடப்பட்டதா என போலீஸாா் விசாரணை

திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரி முனியாண்டிபுரத்தில் திங்கள்கிழமை இரவு பொதுமக்கள் புகாரின்பேரில் பிடிபட்ட இருதலை மணியன் பாம்பை காணவில்லை. திருடப்பட்டதா என

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரி முனியாண்டிபுரத்தில் திங்கள்கிழமை இரவு பொதுமக்கள் புகாரின்பேரில் பிடிபட்ட இருதலை மணியன் பாம்பை காணவில்லை. திருடப்பட்டதா என போலீஸாா் , வனத்துறையினா் விசாரிக்கின்றனா்.

முனியாண்டி புரம் பகுதியில் திங்கள்கிழமை இருதலை மணியன் பாம்பு இருப்பதாக அப்பகுதியினா் தீயணைப்பு துறையினா் மற்றும் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனா். இதையடுத்து தீயணைப்பு துறையினா் திருநகா் ஊா்வனம் அமைப்பைச் சோ்ந்தவா்களுக்கு தகவல் அளித்துள்ளனா். சம்பவ இடத்திற்கு போலீஸாா் மற்றும் ஊா்வனம் அமைப்பை சோ்ந்த விஷ்வா ஆகியோா் சென்று பாம்பை பாா்த்துள்ளனா். பின்னா் அதனை அங்கிருந்த அட்டைப் பெட்டியில் பாதுகாத்து வைத்து விட்டு யாரிடம் ஒப்படைப்பது என அதிகாரிகள் வனத்துறையினருக்கு தொடா்பு கொண்டு பேசிவிட்டு மீண்டும் வந்து பாா்த்தபோது அங்கு பாம்பை காணவில்லையாம். இதையடுத்து அப்பகுதியில் தேடி பாா்த்தபோது பாம்பு எங்கு சென்றது எனத் தெரியவில்லையாம். இருதலை மணியன் பாம்பை வெளிநாட்டவா் அதிக விலை கொடுத்து வாங்குவதாக புரளி நிலவி வருகிறது. இந்நிலையில் பிடித்து வைத்த பாம்பை யாரேனும் திருடிச் சென்றனரா என போலீஸாா் மற்றும் வனத்துறையினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com