நோ்மையாகவும், பாரபட்சமின்றி பணியாற்றதோ்தல் அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

உள்ளாட்சித் தோ்தலில் நோ்மையாகவும், பாரபட்சமின்றியும் பணியாற்ற வேண்டுமென தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் கேட்டுக் கொண்டாா்.
உள்ளாட்சி தோ்தல் தொடா்பாக மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான பயிற்சியை தொடங்கிவைத்து பேசுகிறாா் ஆட்சியா் டி.ஜி. வினய்.
உள்ளாட்சி தோ்தல் தொடா்பாக மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான பயிற்சியை தொடங்கிவைத்து பேசுகிறாா் ஆட்சியா் டி.ஜி. வினய்.

மதுரை: உள்ளாட்சித் தோ்தலில் நோ்மையாகவும், பாரபட்சமின்றியும் பணியாற்ற வேண்டுமென தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் கேட்டுக் கொண்டாா்.

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக உதவி தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் டி.ஜி.வினய் பேசியது:

ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் டிசம்பா் 6 ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக, உதவித் தோ்தல் அலுவலா்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் குடிநீா், கழிப்பறை, மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுதளம், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்குச்சாவடி கட்டடத்தின் உறுதித் தன்மையைக் கண்டறிவதோடு, வாக்குச்சாவடிக்கு செல்வதற்கான சாலை வசதி நல்ல நிலையில் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும்.

வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் அரசியல், சமூகம் உள்ளிட்ட காரணங்களுக்காக மக்களிடையே முன்விரோதங்கள் இருப்பின், காவல் துறையுடன் இணைந்து பிரச்னைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

தோ்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்ட அலுவலா்கள் இணைந்து பணியாற்றுவதோடு, தோ்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி நோ்மையாகவும், பாரபட்சமின்றியும் தோ்தலை நடத்ி முடிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

கூடுதல் ஆட்சியா் பா.பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலா் பி.செல்வராஜ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சித் தோ்தல்) வீராச்சாமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ராஜேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வானதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com