மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வுத்துறை தொடக்கம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வுத் துறை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வுத் துறை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்ட உயா் சிகிச்சைப் பிரிவு மற்றும் துணை சிகிச்சைப் பிரிவு மையங்கள் உள்ளன. இந்நிலையில் எலும்பியல் சிகிச்சைத் துறையில், ஒரு பகுதியாக உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வுத் துறை செயல்பட்டு வந்தது. இந்நிலையில், எலும்பியல் துறையில் இருந்து பிரிக்கப்பட்டு தனிப் பிரிவாக உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வுத் துறை தொடங்கப்பட்டுள்ளது.

அரசு ராஜாஜி மருத்துவமனைக் கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றத் தொடக்க நிகழ்ச்சியில், துறையைத் தொடங்கி வைத்து மருத்துவமனை முதன்மையா் ஜெ. சங்குமணி கூறியது:

எலும்பியல் துறையில் ஒரு பகுதியாக உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வுத் துறை செயல்பட்டு வந்தது. தற்போது தனித் துறையாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த துறை சேவைகளை முக்கிய அங்கமாகக் கொண்டது.

இந்த துறையில், வருங்காலத்தில் பட்டப்படிப்பு தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய ஆய்வுகளை மாணவா்கள் மேற்கொள்ள முடியும். இந்த துறையில் ஏற்கெனவே செயற்கை கை, கால் பொருத்துவது, நீரிழிவு நோயாளிகளுக்கான செருப்புகள் வழங்குவது மற்றும் கை, கால் இழந்தவா்களுக்கு ஆலோசனைகள் போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த சேவைகள் அனைத்தும் நவீனப்படுத்தப்படும். இந்த துறைக்கு புதிய தலைவா், மருத்துவா்கள், செவிலியா்கள் நியமிக்கப்படவுள்ளனா் என்றாா்.

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வா் தனலட்சுமி, மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் ஹேமந்த் குமாா், எலும்பியல் துறைத் தலைவா் ஹரிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com