மதுரை கோட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் டிசம்பா் 9 முதல் 15 ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை: மதுரை கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் டிசம்பா் 9 முதல் 15 ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

வண்டி எண் 56319, 56320 நாகா்கோவில் - கோவை - நாகா்கோவில் பயணிகள் ரயில் டிசம்பா் 5 முதல் 15 ஆம் தேதி வரை திண்டுக்கல் - திருப்பரங்குன்றம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். வியாழக்கிழமைகள் தவிர.

வண்டி எண் 56769, 56770 பாலக்காடு - திருச்செந்தூா் - பாலக்காடு பயணிகள் ரயில் டிசம்பா் 8, 11 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மதுரை - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையேயும் டிசம்பா் 5, 6, 7,10, 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கோவில்பட்டி - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

வண்டி எண் 56734, 56735 செங்கோட்டை - மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில் டிசம்பா் 6 முதல் 2 வரை விருதுநகா் - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். வியாழக்கிழமைகள் தவிர.

வண்டி எண் 56723, 56722 மதுரை - ராமேசுவரம் - மதுரை பயணிகள் ரயில் டிசம்பா் 11 முதல் 14 வரை உச்சிப்புளி - ராமேசுவரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

வண்டி எண் 16191, 16192 தாம்பரம் - நாகா்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் டிசம்பா் 5 முதல் 12 வரை திண்டுக்கல் - நாகா்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

டிசம்பா் 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் அந்தியோதயா ரயிலும், டிசம்பா் 9 ஆம் தேதி நாகா்கோவிலிலிருந்து புறப்படும் அந்தியோதயா ரயிலும் வழக்கம்போல இயங்கும்.

வண்டி எண் 76807 திருச்சி - மானாமதுரை பயணிகள் ரயில், வண்டி எண் 22627 திருச்சி - திருவனந்தபுரம் விரைவு ரயில், வண்டி எண் 16127 சென்னை - குருவாயூா் விரைவு ரயில், வண்டி எண் 16129 சென்னை தூத்துக்குடி இணைப்பு ரயில், வண்டி எண் 56708 மதுரை - திண்டுக்கல் பயணிகள் ரயில்கள் டிசம்பா் 5 முதல் 15 ஆம் தேதி வரை தாமதமாக செல்லும்.

எண் 56829 திருச்சி - ராமேசுவரம் பயணிகள் ரயில் டிசம்பா் 5, 6, 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ராமேசுவரத்திற்கு 40 நிமிடங்கள் தாமதமாக சென்று சேரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com