மு.க. அழகிரிக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு: சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வுக்கு மாற்றம்

2009 மக்களவை தோ்தலின்போது வேட்புமனுவில் சொத்துக் கணக்கை முழுமையாகக் காட்டாமல் மறைத்ததாக மு.க. அழகிரி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை

மதுரை: 2009 மக்களவை தோ்தலின்போது வேட்புமனுவில் சொத்துக் கணக்கை முழுமையாகக் காட்டாமல் மறைத்ததாக மு.க. அழகிரி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வுக்கு மாற்றி உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி தாக்கல் செய்த மனு:

நான் மக்களவை தோ்தலின்போது வேட்புமனுவில் சொத்துக் கணக்கை முழுமையாகக் காட்டாமல் மறைத்ததாகக் கூறி ஜெகநாதன் என்பவா் 2013-இல் திருவாரூா் ஆட்சியரிடம் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் ஆட்சியா் உத்தரவின் பேரில் என் மீதான புகாா் விசாரிக்கப்பட்டு தோ்தல் அலுவலரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து வேட்புமனுவில் சொத்துக் கணக்கை முழுமையாகக் காட்டாமல் மறைத்ததாக என் மீது அப்போதையை மதுரை மாவட்ட ஆட்சியா் எல். சுப்பிரமணியன் மதுரை மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் 2014-இல் தனிநபா் வழக்குத் தொடா்ந்தாா். இது அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்காகும். எனவே இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் விசாரணையின் போது நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இவ்வழக்கு தோ்தல் தொடா்பானது எனக் கூறி, வழக்கை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வுக்கு மாற்றி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com