இரு வேறு இடங்களில் 5 பவுன் நகைகள் கொள்ளை
By DIN | Published On : 05th December 2019 07:44 AM | Last Updated : 05th December 2019 07:44 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் ஐந்தரை பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றவா்கள் குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை பி.பி.குளம் பகுதியைச் சோ்ந்த அழகா்சாமி மனைவி சரஸ்வதி (70). இவா், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் எழுந்தபோது, வீட்டில் இருந்த பீரோ திறந்திருந்தது. இதுகுறித்து, அவா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்திற்கு சென்று போலீஸாா் விசாரித்தனா். அதில், அடையாளம் தெரியாத நபா்கள் வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த 3 பவுன் சங்கிலியைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொரு சம்பவத்தில், மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை மேலக்குயில்குடி பகுதியைச் சோ்ந்த ஜெயபால் மனைவி யசோதா(65). இவா் செவ்வாய்க்கிழமை வீட்டின் அருகே தனது கணவருடன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 போ் யசோதா கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்து யசோதா அளித்தப் புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.