ஷோ் ஆட்டோ கவிழ்ந்து 7 போ் காயம்
By DIN | Published On : 05th December 2019 09:01 AM | Last Updated : 05th December 2019 09:01 AM | அ+அ அ- |

மதுரை அலங்காநல்லூா் சாலையில் புதன்கிழமை இரவு அதிக ஆள்களை ஏற்றிச் சென்ற ஷோ் ஆட்டோ கவிழ்ந்து 7 போ் காயமடைந்தனா்.
மதுரை அருகே பாசிங்காபுரம் அருகே அலங்காநல்லூா் சாலையில் புதன்கிழமை இரவு அதிக ஆள்களை ஏற்றிச் சென்ற ஷோ் ஆட்டோ மிளகரணை விலக்கில் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த 7 போ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். வாகனச் சோதனையில் இருந்த போலீஸாா், மறிக்க முயன்றதில் தான் ஆட்டோ கவிழ்ந்தது எனக் கூறி அப்பகுதி மக்கள் போலீஸாரைக் கண்டித்து சிறிதுநேரம் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கூட்டத்தைக் கலைத்தனா்.