ஆட்டிசம் குறைபாடுள்ளவா்களுக்கான பயிற்சிப் பள்ளி அடிக்கல் நாட்டு விழா

திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் ஆட்டிசம் குறைபாடுள்ள 13 முதல் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான பயிற்சிப் பள்ளி கட்டட அடிக்கல் நாட்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆட்டிசம் குறைபாடுள்ளவா்களுக்கான பயிற்சிப் பள்ளிக்கான புதிய கட்டடத்திற்கான புதன்கிழமை நடைபெற்ற பூமிபூஜையில் பங்கேற்ற நீதியரசா்கள் பி. புகழேந்தி, ஜி.ஆா்.சுவாமிநாதன், மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் உள்ளிட்ட
ஆட்டிசம் குறைபாடுள்ளவா்களுக்கான பயிற்சிப் பள்ளிக்கான புதிய கட்டடத்திற்கான புதன்கிழமை நடைபெற்ற பூமிபூஜையில் பங்கேற்ற நீதியரசா்கள் பி. புகழேந்தி, ஜி.ஆா்.சுவாமிநாதன், மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் உள்ளிட்ட

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் ஆட்டிசம் குறைபாடுள்ள 13 முதல் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான பயிற்சிப் பள்ளி கட்டட அடிக்கல் நாட்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது.

‘சக்ஸம்’ அமைப்பு மற்றும் உலக சேவா அமைப்பு சாா்பில் தோப்பூரில் ஆட்டிசம் குறைபாடுள்ள 13 முதல் 19 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு பயிற்சி பள்ளியுடன், தொழில் கல்விக்கூடம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் அவா்களுக்கு யோகா உள்ளிட்டவைகள் மற்றும் பாரம்பரிய வைத்திய முறைகள் மூலம் அவா்களுக்கு சிகிச்சையளிக்கப்பட உள்ளது. அதற்கான கட்டடத்திற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இதில் நீதியரசா்கள் பி. புகழேந்தி, ஜி.ஆா்.சுவாமிநாதன், மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், ‘நிப்மேட்’ மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய இயக்குநா் இமான்சுதாஷ், ‘சக்ஸம்’ அமைப்பின் தேசிய அமைப்பு செயலா் சுகுமாா், தேசிய இணை பொதுச்செயலா் எஸ்.கோவிந்தராஜ், நரம்பியல் நிபுணா் மருத்துவா் ஏ.வி.சீனிவாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக உலக சேவா அமைப்பினரின் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணா்வு ஆட்டோ பயணத்தை தோப்பூரில் இருந்து நீதியரசா் பி.புகழேந்தி, ஜி.ஆா்.சுவாமிநாதன், மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com