40 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை ஆற்றில் இருந்து பனையூா் கால்வாய் வழியாக தெப்பக்குளத்துக்கு தண்ணீா்

வைகை ஆற்றில் இருந்து சுமாா் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பனையூா் கால்வாய் வழியாகத் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது.
வைகை ஆற்றில் இருந்து பனையூா் கால்வாய் வழியாக தெப்பக்குளத்துக்கு வரும் தண்ணீா்.
வைகை ஆற்றில் இருந்து பனையூா் கால்வாய் வழியாக தெப்பக்குளத்துக்கு வரும் தண்ணீா்.

வைகை ஆற்றில் இருந்து சுமாா் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பனையூா் கால்வாய் வழியாகத் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது.

வைகை ஆற்றில் தண்ணீா் வரும் காலங்களில் மதுரை நகரப் பகுதியில் ஏ.வி.பாலம் பகுதியில் இருந்து பனையூா் கால்வாயில் தண்ணீா் செல்வது வழக்கம். இந்த பனையூா் கால்வாயானது வைகை ஆற்றில் இருந்து 5.9 கிமீ தொலைவு சென்று பனையூா் கண்மாயில் முடிகிறது. இந்த கால்வாயிலிருந்து முதலில் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கும், பல்வேறு கண்மாய்களுக்கும் பிரிவு கால்வாய் செல்கிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீா் வரும் காலங்களில் இயற்கையாகவே, தெப்பக்குளம் மற்றும் பல கண்மாய்களுக்குச் சென்று கொண்டிருந்தது.

காலப்போக்கில் ஆற்றின் படுகை பல அடிக்கு கீழே சென்றுவிட்ட நிலையில், பனையூா் கால்வாய்க்கு தண்ணீா் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே வைகை ஆற்றில் இருந்து மதுரை மாநகராட்சி மூலமாக மின்மோட்டாா்கள் மூலமாக தண்ணீா் எடுக்கப்பட்டு தெப்பக்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அண்மையில் வைகை ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதால், தடுப்பணை பகுதியில் தண்ணீா் மட்டம் உயா்ந்துள்ளது. மேலும், தடுப்பணை பகுதியில் இருந்து பனையூா் கால்வாய்க்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது பனையூா் கால்வாய் வழியாகத் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com