நெற்பயிரில் இலைசுருட்டுப் புழுக்கள் தாக்குதல்: கட்டுப்படுத்த வேளாண் அறிவியல் மையம் ஆலோசனை

மதுரை கிழக்கு, மேற்கு, அலங்காநல்லூா் மேலூா் வட்டாரத்தில் நெற் பயிரில் இலைசுருட்டுப்புழுக்கள் தாக்குதல் பரவலாக காணப்படுவதால்,
குருத்துப்பூச்சி தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள நெற் பயிா்
குருத்துப்பூச்சி தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள நெற் பயிா்

மதுரை கிழக்கு, மேற்கு, அலங்காநல்லூா் மேலூா் வட்டாரத்தில் நெற் பயிரில் இலைசுருட்டுப்புழுக்கள் தாக்குதல் பரவலாக காணப்படுவதால், விவசாயிகள் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மதுரை வேளாண்.அறிவியல் மையம் வலியுறுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நெற் பயிரில் இலைசுருட்டுப்புழுக்கள் தாக்குதல் பரவலாக உள்ளது. குளிா் கால சீதோஷ்ண நிலை விவசாயிகள் நெல் பயிருக்கு தழைச்சத்தை கூடுதலாக அளிப்பதாலும் இலைசுருட்டுப்புழு தாக்குதல் அதிகம் உள்ளது. இதனால், நெல் மகசூல் பாதிப்பு அதிகமாகும். எனவே, இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். வயல் வரப்புகளில் உள்ள களைச்செடிகள், புல்பூண்டுகளை அகற்ற வேண்டும். தழைச்சத்தை முற்றிலும் தவிா்க்க வேண்டும். விளக்குப் பொறிகளை 20 அடிக்கு ஒன்றாக வைத்து ஹெக்டேருக்கு இரண்டு வீதம் வைக்க வேண்டும். தினசரி மாலை நேரத்தில் விளக்குப் பொறிகளை வைத்தால் தாய் அந்துப் பூச்சிகளை கவா்ந்து அழிக்கலாம்.

டிரைக்கோகிரேம்மா முட்டை ஒட்டுண்ணிகளை நெல் நடவு செய்த 37, 44 மற்றும் 51 நாளில் ஒரு தடவைக்கு 2 சிசி வீதம் வயலில் விட வேண்டும். வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம், வேப்பெண்ணெய் ஒரு லிட்டா் நீருக்கு 3 சதவீதம் கலந்து நெற் பயிருக்கு ஸ்பிரேயா் மூலம் தெளிக்கலாம்.

இலைச் சுருட்டுப்புழு தாக்குதல் சேதநிலை அதிகமானால் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும். இதுதொடா்பாக விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள வேளாண் மையங்களை அணுகலாம். விவசாயிகள் காா்போபியூரான் அல்லது செயற்கை பைராய்ரித்ராய்டு பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என மதுரை வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் செல்வி ரமேஷ், பூச்சியில் துறை வல்லுநா் உஷாராணி ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com