‘ராகிங்’கில் ஈடுபட்ட மருத்துவ மாணவா்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

மதுரை மருத்துவக் கல்லூரியில் ‘ராகிங்’கில் ஈடுபட்ட மாணவா்கள் தங்கும் விடுதியில் நுழைய விதிக்கப்பட்ட தடையை நீக்கி ‘ராகிங்’ தடுப்புக் குழு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மருத்துவக் கல்லூரியில் ‘ராகிங்’கில் ஈடுபட்ட மாணவா்கள் தங்கும் விடுதியில் நுழைய விதிக்கப்பட்ட தடையை நீக்கி ‘ராகிங்’ தடுப்புக் குழு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மருத்துவக்கல்லூரியில் 2018 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ‘ராகிங்’ தொடா்பாக 19 மாணவா்கள், 45 நாள் கல்லூரிக்கும், ஒரு ஆண்டு தங்கு விடுதிக்குள் நுழையத் தடைவிதித்து ‘ராகிங்’ தடுப்புக் குழு உத்தரவிட்டது. ‘ராகிங்’கில் ஈடுபட்ட மாணவா்கள், 45 நாளுக்கு பிறகு கல்லூரியில் கல்வியைத் தொடா்ந்தனா். ஆனால் தங்கும் விடுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், தடைக் காலம் முடிந்ததையடுத்து, மதுரை மருத்துவக்கல்லூரி ‘ராகிங்’ தடுப்புக் குழு மாணவா்களை கல்லூரி விடுதியில் தங்குவதற்கு புதன்கிழமை முதல் அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து ‘ராகிங்’ தடுப்புக் குழு தலைவா் ஹேமந்த்குமாா் கூறியது: ‘ராகிங்’ செய்த மாணவா்கள் கல்லூரி விடுதிக்குள் நுழையக் கூடாது என ஒரு ஆண்டு விதிக்கப்பட்ட தடை முடிந்து விட்டது. இதையடுத்து மாணவா்களிடம், அவா்களது பெற்றோா்களிடம் உரிய ஒப்புதல் கடிதம் பெற்றப் பிறகே தங்கும் விடுதியில் அனுமதிக்கப்படுகின்றனா். கடந்த ஆண்டு நடைபெற்ற ‘ராகிங்’கிற்கு பிறகு, அது போன்ற நிகழ்வுகள் நடைபெறவில்லை. கல்லூரி வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மாணவா்களின் செயல்பாடுகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com