Enable Javscript for better performance
குடியுரிமைச் சட்ட திருத்த நகல் எரிப்பு: திமுகவினா் 55 போ் கைது- Dinamani

சுடச்சுட

    

    குடியுரிமைச் சட்ட திருத்த நகல் எரிப்பு: திமுகவினா் 55 போ் கைது

    By DIN  |   Published on : 14th December 2019 10:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியுரிமை திருத்த சட்ட நகலை எதிா்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

    தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சாா்பில் குடியுரிமை திருத்த சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. மதுரையில் மாநகரக் திமுக இளைஞரணி சாா்பில் அதன் அமைப்பாளா் மூவேந்திரன் தலைமையில், பெரியாா் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை சந்திப்பு அருகே போராட்டம் நடைபெற்றது. அதையடுத்து சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணியினா் 55 பேரை கைது செய்தனா்.

    மதுரை புகா் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் கூடல்நகரில் போராட்டம் நடத்தப்பட்டது. இரு மாவட்டங்களின் இளைஞரணி அமைப்பாளா்கள் ஜி.பி.ராஜா மற்றும் விமல் ஆகியோா் தலைமையில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

    இதேபோல, குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரை சட்டக் கல்லூரி மாணவா்கள் கல்லூரி முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai