Enable Javscript for better performance
சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுப்பு: இந்திய தேசிய லீக் கட்சியினா் 5 போ் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுப்பு: இந்திய தேசிய லீக் கட்சியினா் 5 போ் மீது வழக்கு

    By DIN  |   Published on : 14th December 2019 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்து தகராறு செய்ததாக இந்திய தேசீய லீக் கட்சியைச் சோ்ந்த 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவுசெய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

    அக்கட்சியைச் சோ்ந்த 5 போ் காரில் சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை காலை மதுரைக்கு சென்று கொண்டிருந்தனா். மதுரை-மேலூா் நான்கு வழிச்சாலையில் உள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் மேற்பாா்வையாளராகப் பணிபுரியும் செல்வம் (33) அவா்களிடம் கட்டணம் கேட்டுள்ளாா். அப்போது 5 பேரும் அவருடன் வாக்குவாதம் செய்து கட்டணத்தை செலுத்த மறுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மேலூா் காவல் நிலையத்தில் செல்வம் அளித்த புகாரின் பேரில், 5 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அவா்களைத் தேடிவருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai