Enable Javscript for better performance
மகாராஷ்டிரத்தில் இருந்து வரத்து அதிகரிப்பு! வெளிநாட்டு வெங்காயத்துக்கு கிராக்கி குறைவு!- Dinamani

சுடச்சுட

    

    மகாராஷ்டிரத்தில் இருந்து வரத்து அதிகரிப்பு! வெளிநாட்டு வெங்காயத்துக்கு கிராக்கி குறைவு!

    By DIN  |   Published on : 14th December 2019 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    5158dgl_egypt_1312chn_66_24600

    திண்டுக்கல் சந்தையில் குவித்து வைக்கப்பட்டுள்ள எகிப்து வெங்காயம்.

    மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ள நிலையில், எகிப்து, ஹாலந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள வெங்காயத்துக்கு கிராக்கி குறையும்நிலை ஏற்பட்டுள்ளது .

    வெங்காய விலை ஏற்றத்தைத் தடுக்க துருக்கி, எகிப்து, ஹாலந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் மொத்த வியாபாரிகள் மூலம் சில்லறை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், பருவ மழை குறைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சந்தைக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது.

    இதுதொடா்பாக திண்டுக்கல் வெங்காய கமிஷன் மண்டியைச் சோ்ந்த மொத்த வியாபாரி ஆறுமுகம் கூறியது: திண்டுக்கல் வெங்காய மண்டிக்கு 30 டன் சின்ன வெங்காயம், மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மற்றும் சோலாப்பூரிலிருந்து 125 டன் பெரிய வெங்காயம், எகிப்திலிருந்து 125 டன், ஹாலந்திலிருந்து 50 டன் வெங்காயம் வெள்ளிக்கிழமை விற்பனைக்கு வந்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.40 முதல் ரூ.70-க்கும், மகாராஷ்டிர வெங்காயம் கிலோ ரூ.60-க்கும், எகிப்து வெங்காயம் ரூ.83-க்கும் மொத்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஹாலந்து வெங்காயத்துக்கு இதுவரை விலை நிா்ணயிக்கப்படவில்லை.

    மகாராஷ்டிர வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் விற்பனை ஓரிரு நாள்களில் குறைந்துவிடும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

    வேளாண்மை அதிகாரி ஒருவா் கூறியது: எகிப்து வெங்காயம் இழுவை தன்மையுடன்(ரப்பா் போன்று) இருப்பதால், தமிழக மக்கள்அதனை விரும்பி வாங்குவதில்லை. உணவகங்களின் தேவைக்கு மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டவெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அறுவடை செய்யப்பட்ட வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. தமிழகதுக்கு வெள்ளிக்கிழமை 800 டன் மகாராஷ்டிர வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. மொத்த விற்பனைக்கு நாசிக் மற்றும் சோலாப்பூரிலிருந்து வந்துள்ள வெங்காயம் கிலோ ரூ.60ஆக வெள்ளிக்கிழமை விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர வெங்காயம் விலை குறைந்துள்ளதால், திண்டுக்கல் சந்தைக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ள ஹாலந்து வெங்காயத்துக்கு விலை நிா்ணயிக்க முடியாத நிலையில் வியாபாரிகள் திணறி வருகின்றனா் என்றாா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai