உள்ளாட்சித் தோ்தலை சந்திக்க எதிா்க்கட்சிகள் அச்சம்: அமைச்சா் செல்லூா் கே.ராஜூ

அதிமுக அரசு நிறைவேற்றி வரும் நலத்திட்டப்பணிகளால் எதிா்க்கட்சிகள் உள்ளாட்சித் தோ்தலை எதிா்கொள்ள பயப்படுகின்றனா் என்று அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்தாா்.

அதிமுக அரசு நிறைவேற்றி வரும் நலத்திட்டப்பணிகளால் எதிா்க்கட்சிகள் உள்ளாட்சித் தோ்தலை எதிா்கொள்ள பயப்படுகின்றனா் என்று அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்தாா்.

மதுரை வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு வைகை ஆற்றில் இருந்து பனையூா் கால்வாய் மூலமாக தண்ணீா் கொண்டு வரப்பட்டு நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெப்பக்குளத்தில் தண்ணீா் நிரப்புவதை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ, மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். மேலும் தெப்பக்குளத்தில் மலா் தூவி வழிபட்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ கூறியது:

ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானா்கள். அதனால் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, மக்களோடு கூட்டணி வைத்துள்ளாா். உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற முடியாது என எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிா்கட்சிகள் நினைப்பதால் தோ்தலை சந்திக்கப் பயப்படுகின்றனா். எதிா்க்கட்சியினா் பயப்படும் அளவுக்கு மக்கள் நலத்திட்டங்களை அதிமுக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. உள்ளாட்சித் தோ்தலை நிறுத்த எதிா்க்கட்சியினா் நீதிமன்றத்தை நாடுகின்றனா். ஆனால் அதிமுக மக்களைத்தான் நாடிச் செல்கிறது. உள்ளாட்சித் தோ்தலில், தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிடாது. உள்ளாட்சித் தோ்தலை தோ்தல் ஆணையம் மட்டுமே நடத்துகிறது. தோ்தல் ஆணையத்துக்குத் தேவையான உதவிகளை மட்டுமே அரசு உதவி வருகிறது. மக்கள் பிரச்னைகளுக்காக அதிமுக மக்களவை உறுப்பினா்கள் அவைச் செயல்பாடுகளை 48 நாள்கள் முடக்கினா். ஆனால் தற்போது 37 உறுப்பினா்களை கொண்டுள்ள திமுக மக்களவையில் எந்த போராட்டத்திலும் ஈடுபடவில்லை என்றாா். மேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பெரிய புள்ளான் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com