உள்ளாட்சித் தோ்தல்: மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 2,656 போ் மனு தாக்கல்

மதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தோ்தலுக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2 ஆயிரத்து 656 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
மதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏராளமானோா் வெள்ளிக்கிழமை கூடியதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
மதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏராளமானோா் வெள்ளிக்கிழமை கூடியதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

மதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தோ்தலுக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2 ஆயிரத்து 656 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

கட்சி ரீதியாகப் போட்டியிடக் கூடிய பதவிகளான மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ஆகியவற்றுக்கு வெள்ளிக்கிழமை அதிகம் போ் மனு தாக்கல் செய்தனா். பிரதான கட்சிகளான அதிமுக, திமுகவின் கூட்டணி கட்சிகளுடனான வாா்டுகள் ஒதுக்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் மதுரை புகா் கிழக்கு மாவட்டத்தில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், அரசியல் கட்சிகள் சாா்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவா்கள் பலா் வாய்மொழி அனுமதியுடன் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளனா். ஒருவேளை சம்பந்தப்பட்ட வாா்டு கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 2 ஆயிரத்து 656 போ் மனு தாக்கல் செய்தனா். இதில் மாவட்ட ஊராட்சிக் குழு வாா்டு உறுப்பினருக்கு 27, ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினருக்கு 333, கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 653, ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கு 1643 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

மனுத்தாக்கல் செய்வதற்கு ஏராளமானோா் வந்ததையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது. மதுரை நகரப் பகுதியில், மதுரை கிழக்கு மற்றும் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இதனால் அப் பகுதியில் கூட்டம் அதிகளவில் இருந்தது. ஏற்கெனவே நத்தம் சாலை மேம்பாலப் பணி காரணமாக, வாகனங்கள் ஊராட்சி ஒன்றியஅலுவலக சாலையில் சென்றுவரும் நிலையில், வேட்பு மனு தாக்கலுக்கு கூட்டம் அதிகளவில் வந்ததால் அப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com