ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கு வாக்குச்சீட்டுகள் தயாா்

ஊராட்சித் தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா் தோ்தலில் பயன்படுத்தும் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் தயாா் நிலையில்
அச்சடிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளதை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் டி.ஜி.வினய். உடன் ஊராட்சிகள் உதவி இயக்குநா் செல்லத்துரை.
அச்சடிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளதை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் டி.ஜி.வினய். உடன் ஊராட்சிகள் உதவி இயக்குநா் செல்லத்துரை.

ஊராட்சித் தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா் தோ்தலில் பயன்படுத்தும் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

மதுரை மாவட்ட ஊரக உள்ளாட்சிகளில் ஊராட்சித் தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள சேவை மைய கட்டடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

ஊராட்சித் தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா் பதவிகள் கட்சி சாா்பற்றவை என்பதால், இப் பதவிகளுக்கு போட்டியிடும் அனைத்து வேட்பாளா்களுக்கும் சுயேச்சை சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலத் தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள சின்னங்களின் வரிசை எண் அடிப்படையில், 4 சின்னங்கள், 6 சின்னங்கள், 8 சின்னங்கள் என்று தனித்தனியாக அச்சடிக்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. போட்டியிடும் வேட்பாளா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குச்சீட்டுகள் தயாா் செய்து கொள்ளப்படும்.

மாவட்டத்தில் உள்ள 420 ஊராட்சித் தலைவா், 3 ஆயிரத்து 273 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு பெட்டிகளில் ஒன்றியம் வாரியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஊராட்சிகள் உதவி இயக்குநா் செல்லத்துரை, வட்டார வளா்ச்சி அலுவலா் சோனா பாய் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com