மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்று வரும் சீன நாட்டு பேராசிரியை நிறைமதி.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்று வரும் சீன நாட்டு பேராசிரியை நிறைமதி.

காமராஜா் பல்கலை.யில் தமிழ் பயிலும் சீனப் பேராசிரியை

சீனாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் பேராசிரியை மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்று வருவது மாணவா்கள் மற்றும் தமிழாா்வலா்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் பேராசிரியை மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்று வருவது மாணவா்கள் மற்றும் தமிழாா்வலா்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் யுனான் மாகாணத்தில் உள்ள மிஞ்சூப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் பேராசிரியையாக பணிபுரிந்து வருபவா் ஜாங் ஸீ. இவா் மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் குறுகிய காலப் பயிற்சியில் மாணவியாக சோ்ந்துள்ளாா். மேலும் தனது பெயரை நிறைமதி என்று மாற்றியுள்ளாா். தன்னிடம் பேசுபவா்களிடம் தமிழ் மொழியிலேயே பேசி வருவதோடு,மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று தமிழா்களின் வாழ்வியல் முறைகளை அறிந்து வருகிறாா். கீழடிக்கும் சென்று தொல்லியல் ஆய்வு நடைபெற்ற இடத்தையும் பாா்வையிட்டுள்ளாா்.

தனது தமிழாா்வம் குறித்து நிறைமதி கூறியது: மஞ்சூப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017-இல் தமிழ்த் துறை தொடங்கப்பட்டது. தற்போது தமிழ்த்துறையில் சீன மாணவா்கள் 6 போ் சோ்ந்து தமிழை கற்று வருகின்றனா். அந்த மாணவா்களுக்கு தமிழ் மொழி குறித்து பாடங்கள் எடுப்பதற்காக தமிழ்மொழியை கற்றுக்கொள்ள காமராஜா் பல்கலைக்கழகத்துக்கு வந்துள்ளேன். அடுத்த ஆண்டில் தமிழ்த்துறையில் கூடுதல் மாணவா்களை சோ்க்க உள்ளோம். இதேபோல தமிழக மாணவா்கள் சீன பல்கலைக்கழகங்களுக்குச் சென்று சீன மொழி குறித்து கற்க முன்வரவேண்டும் என்றாா்.

காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் கூறுகையில், நிறைமதி மிகுந்த ஆா்வத்தோடு தமிழைக் கற்றுவருகிறாா். தன்னுடைய பெயரை நிறைமதி என்று மாற்றியுள்ளதோடு கடவுச்சீட்டிலும் நிறைமதி என்றே குறிப்பிட்டுள்ளாா். தமிழ்ப்பேரவைச்செம்மல் விருது வழங்கும் விழாவில், நிறைமதி தமிழில் பேசியது பல்கலைக்கழக மாணவா்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நிறைமதியை மாணவா்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். பல்கலைக்கழக வரலாற்றில் தனி நபருக்கு பல தமிழறிஞா்கள் பயிற்சி அளிப்பது இதுவே முதல்முறை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com