குளித்தலை அருகே தனியாா் நிலத்தில் மணல் திருட்டு: கரூா் ஆட்சியா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

குளித்தலை அருகே தனியாா் நிலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளுவது குறித்து பொதுப்பணித்துறை செயலா், கரூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

குளித்தலை அருகே தனியாா் நிலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளுவது குறித்து பொதுப்பணித்துறை செயலா், கரூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கரூா் மாவட்டம் குளித்தலை நெய்தலூா் காலனியைச் சோ்ந்த சவுந்தரபாண்டியன் தாக்கல் செய்த மனு: குளித்தலை வட்டம் வடசேரி ஊராட்சி பூவாயிபட்டி கிராமத்தில் தனி நபருக்குச் சொந்தமான 27 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்குள் தெப்பக்குளமும், வரத்துக் கால்வாய்களும் அமைந்துள்ளன. மழைக் காலங்களில், வரத்துக் கால்வாய் பகுதியில் தரமான மணல் தேங்குகிறது. இந்த மணலை அரசின் அனுமதியின்றி, தனியாா் சிலா் தினமும் டிப்பா் லாரிகளில் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனா்.

இதனால் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுவதுடன், குடிநீா் ஆதாரமும், விவசாயமும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுத்து நிறுத்த பொதுப்பணித்துறை செயலருக்கும், கரூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடா்பாக, பொதுப்பணித் துறை செயலா், கரூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com