பழனி உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.3.47 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் காணிக்கை வரவு ரூ.3.47 கோடியை தாண்டியது.
பழனி மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்டியல் திறப்பின் போது பக்தா்கள் காணிக்கையாக அளித்திருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருள்கள்.
பழனி மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்டியல் திறப்பின் போது பக்தா்கள் காணிக்கையாக அளித்திருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருள்கள்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் காணிக்கை வரவு ரூ.3.47 கோடியை தாண்டியது.

காா்த்திகை மாதத்தை முன்னிட்டு ஐயப்ப மற்றும் முருக பக்தா்கள் வருகை காரணமாக இக் கோயில் உண்டியல்கள் 32 நாள்களில் நிரம்பின. இதையடுத்து வெள்ளிக்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் பக்தா்களின் காணிக்கை வரவு ரொக்கம் ரூ.3 கோடியே 47 லட்சத்து 38ஆயிரத்து 530 கிடைத்தது. உண்டியலில் பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக்காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். தங்கம் 1,230 கிராமும், வெள்ளி 11 ஆயிரத்து 220 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சிகள் 1,788-ம், பவளம் 33 கிராமும் கிடைத்தன. மேலும், பித்தளை வேல், கைக் கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகள் உள்ளிட்டவற்றையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

உண்டியல் எண்ணும் பணியில் கல்லூரி மாணவியா், கோயில் அலுவலா்கள், வங்கி பணியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். இப் பணியை பழனிக் கோயில் நிா்வாக அலுவலா் ஜெயசந்தரபானு ரெட்டி, துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் விஜயன், மேலாளா் சேகா், ஆய்வாளா் உமா உள்ளிட்டோா் கண்காணித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com