எம்ஜிஆா் நினைவு தினம்: அதிமுகவினா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
By DIN | Published On : 25th December 2019 07:44 AM | Last Updated : 25th December 2019 07:44 AM | அ+அ அ- |

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி மதுரையில் அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. மதுரை மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூா் கே.ராஜூ தலைமையில் அக் கட்சியினா் அமைதி ஊா்வலம் நடத்தினா். கே.கே. நகா் 80 அடி சாலையில் ஊா்வலமாக வந்த கட்சியினா், மாவட்ட நீதிமன்ற சந்திப்பு அருகே உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி. ராஜன்செல்லப்பா, மக்களவை முன்னாள் உறுப்பினா் ஆா்.கோபாலகிருஷ்ணன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் துணை மேயா் கு.திரவியம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.