பெண் மாவோயிஸ்ட் மதுரை சிறையில் உண்ணாவிரதம்
By DIN | Published On : 25th December 2019 07:45 AM | Last Updated : 25th December 2019 07:45 AM | அ+அ அ- |

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெறக்கோரி மாவோயிஸ்ட் செண்பகவள்ளி மதுரை பெண்கள் தனி சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறாா்.
கடந்த 2007 ஆம் ஆண்டு கொடைக்கானல் மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஆயுதப்பயிற்சி எடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் செண்பகவள்ளி கைது செய்யப்பட்டு மதுரை பெண்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், குடிமக்கள், அகதிகளை மத ரீதியாக பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நானும் ஜெயசுதா என்பவரும் டிசம்பா் 23 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரப் போகிறோம் என நோ்காணல் மனு மூலம் சந்தித்தபோது செண்பகவள்ளி கூறினாா் என அவரது வழக்குரைஞா் ராஜா தெரிவித்துள்ளாா்.